ஸ்ரீ சத்ய சாய் பாபா நூற்றாண்டு விழா: சென்னை, திருவனந்தபுரத்தில் இருந்து சிறப்பு ரயில்கள்
புட்டபர்த்தியில் நடைபெறவுள்ள ஸ்ரீ சத்ய சாய் பாபா பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தெற்கு ரயில்வே சார்பில் பயணிகள் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விழா நவம்பர் 23 அன்று நடைபெறவுள்ள நிலையில், சென்னை மற்றும் திருவனந்தபுரம் வழித்தடங்களில் இருந்து கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரயில் சேவைகள் விவரம்:
- சிறப்பு ரயில் (06091): சென்னை சென்ட்ரலில் இருந்து நவம்பர் 19, 21 தேதிகளில் இரவு 11.50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம் 2.15 மணிக்கு ஆந்திர மாநிலத்தின் குண்டக்கல் நிலையம் சென்றடையும்.
- மறுமார்க்க சிறப்பு ரயில் (06092): குண்டக்கலில் இருந்து நவம்பர் 20, 22 தேதிகளில் மாலை 5.30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 9.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் நிலையம் வந்தடையும்.
அதேபோல்,
- சிறப்பு ரயில் (06093): திருவனந்தபுரம் வடக்கு நிலையத்தில் இருந்து நவம்பர் 19, 21 தேதிகளில் மாலை 6.05 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு சத்யசாய் பிரசாந்தி நிலையம் அடையும்.
- மறுமார்க்க சிறப்பு ரயில் (06094): சத்யசாய் பிரசாந்தி நிலையத்தில் இருந்து நவம்பர் 20, 22 தேதிகளில் இரவு 9 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் பிற்பகல் 3.55 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு நிலையம் வந்தடையும்.
இச்சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு (Reservation) இன்று, அக்டோபர் 26 காலை 8 மணிமுதல் தொடங்குகிறது என தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.