அதிமுக சார்பில் சர்வதேச மகளிர் தின விழா: சேலத்தில் எடப்பாடி பழனிசாமி 40 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
சேலம்: சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, சேலம் மாவட்டம் நெடுஞ்சாலை நகரில் அதிமுக புறநகர் மாவட்ட மகளிர் அணி சார்பில் உற்சாகமான கொண்டாட்டங்கள் நடைபெற்றன. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு சிறப்பித்தார். அவருக்குப் பெண் நிர்வாகிகள் அனைவரும் பூங்கொத்து கொடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாகத் தயார் செய்யப்பட்டிருந்த 40 கிலோ எடையுள்ள பிரம்மாண்ட கேக்கை எடப்பாடி பழனிசாமி வெட்டி, அங்கிருந்த பெண் நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் தனது வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். கட்சியின் வளர்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது என்று குறிப்பிட்ட அவர், அனைத்து மகளிருக்கும் தனது மனமார்ந்த மகளிர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.