செஞ்சியில் உலக மகளிர் தின மாரத்தான்: 300-க்கும் மேற்பட்ட பெண்கள் உற்சாக பங்கேற்பு
உலக மகளிர் தினத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே பெண்களுக்கான பிரத்யேக மாரத்தான் ஓட்டப்பந்தயம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு ஓட்டப்பந்தயத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட பெண்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். செஞ்சி விழுப்புரம் சாலையில் தொடங்கிய இந்த மாரத்தான், சத்திர தெரு, திருவள்ளுவர் தெரு மற்றும் திருவண்ணாமலை சாலை வழியாகச் சென்று முக்கிய சந்திப்பான நான்குமுனை கூட்ரோட்டில் நிறைவடைந்தது. இந்த நிகழ்வின் போது, பங்கேற்ற மாணவிகள் பல்வேறு வீர விளையாட்டு சாகசங்களை நிகழ்த்திக் காட்டி தங்களது தனித்திறமைகளை வெளிப்படுத்தியது அங்கிருந்தோரை வெகுவாகக் கவர்ந்தது.