தமிழக அரசு அதிரடி: ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு அரசாணை

Date:

தமிழக அரசு அதிரடி: ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (MRB) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வரும் ஒப்பந்த செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 6 மாத மகப்பேறு விடுப்பு வழங்கி தமிழக அரசு முறைப்படி அரசாணை வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் பணி நிரந்தரம், ஊதிய உயர்வு மற்றும் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்துத் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தப் போராட்டங்களின் பலனாக, முதற்கட்டமாக ஆயிரம் செவிலியர்களுக்குப் பணி நிரந்தர ஆணையை அரசு வழங்கியது. அதனைத் தொடர்ந்து, தற்போது பெண் செவிலியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுபவர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்புச் சலுகையை அரசு நீட்டித்துள்ளது. அரசின் இந்தச் சமூக நல நடவடிக்கை ஒப்பந்த செவிலியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கோடநாடு வழக்கு: “ஏன் இவ்வளவு தாமதம்?” – அதிகாரிகளிடம் நீதிபதி சரமாரி கேள்வி!

கோடநாடு வழக்கு: "ஏன் இவ்வளவு தாமதம்?" - அதிகாரிகளிடம் நீதிபதி சரமாரி...

மது போதையில் குடும்பத்தினரை சித்ரவதை: திருவண்ணாமலையில் கணவனை அடித்துக் கொன்ற மனைவி!

மது போதையில் குடும்பத்தினரை சித்ரவதை: திருவண்ணாமலையில் கணவனை அடித்துக் கொன்ற மனைவி! திருவண்ணாமலை...

சுகோய்-30MKI போர் விமான விபத்து: இரண்டு விமானிகள் உயிரிழப்பு – சீனாவின் சிக்னல் ஊடுருவலா எனத் தீவிர விசாரணை!

சுகோய்-30MKI போர் விமான விபத்து: இரண்டு விமானிகள் உயிரிழப்பு - சீனாவின்...

அமீரகத்தில் தவித்த இந்தியர்களுக்கு அடைக்கலம்: ராஜஸ்தான் தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்!

அமீரகத்தில் தவித்த இந்தியர்களுக்கு அடைக்கலம்: ராஜஸ்தான் தொழிலதிபரின் நெகிழ்ச்சி செயல்! மத்திய கிழக்கு...