“தேர்தல் களம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சாதகமாக உள்ளது” – பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
சென்னை:
மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், தற்போதைய தேர்தல் களம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகவும் சாதகமாக இருப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்பதை உறுதிபடத் தெரிவித்த அவர், கடந்த ஐந்து ஆண்டு கால ‘கொடுங்கோல் ஆட்சி’ விரைவில் முடிவுக்கு வரவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், தமிழக முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிவிட்டதாகப் பொய் பேசி வருவதாகவும், உண்மை நிலை என்ன என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் அவர் விமர்சித்தார். மக்கள் தற்போதைய அரசின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருப்பதாகவும், இந்தத் தேர்தல் முடிவு அதை வெளிப்படுத்தும் என்றும் அன்புமணி ராமதாஸ் தனது பேட்டியில் தெரிவித்தார்.