தஞ்சை: பாஸ் இல்லாமல் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ஓடிய த.வெ.க தொண்டர்கள் – போலீசாருடன் வாக்குவாதம்
தஞ்சாவூர்: தஞ்சையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில், பாஸ் இல்லாத தொண்டர்கள் தடுப்புகளை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைய முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இக்கூட்டத்திற்காக சுமார் 5,000 பேருக்கு மட்டுமே அனுமதி சீட்டுகள் (Pass) வழங்கப்பட்டிருந்த நிலையில், நுழைவு வாயிலில் போலீசார் தீவிர சோதனைக்குப் பிறகே தொண்டர்களை அனுமதித்தனர். அப்போது பாஸ் இல்லாமல் வெளியில் காத்திருந்த நூற்றுக்கணக்கான தொண்டர்கள், திடீரென போலீசாரின் பாதுகாப்பு வளையத்தையும் தடுப்புகளையும் உடைத்துக்கொண்டு முண்டியடித்தபடி கூட்ட அரங்கிற்குள் ஓடினர். “தடை அதை உடை” என்ற பாடலின் வரிகளுக்கு ஏற்ப ஆக்ரோஷமாகச் சென்ற தொண்டர்களைக் கட்டுப்படுத்த முயன்ற காவலர்களுக்கும், த.வெ.க தொண்டர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.