முதியனூர் அருகே மயங்கி விழுந்த காட்டு யானை: 7-வது நாளாகத் தொடரும் தீவிர சிகிச்சை
ஈரோடு: சத்தியமங்கலம் அடுத்துள்ள தாளவாடி முதியனூர் கிராமத்தில், கடந்த 20-ஆம் தேதி உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்த காட்டு யானைக்கு, 7-வது நாளாக வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், யானையின் உடல்நிலையில் போதிய முன்னேற்றம் ஏற்படாததால் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இந்த நிலையில், முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் உதயன் நேரில் சென்று யானையின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்தார். அப்போது, யானையை மீண்டும் நடக்க வைப்பதற்கான அனைத்து விதமான உயர் சிகிச்சைகளையும் தடையின்றி வழங்க வேண்டும் என கால்நடை மருத்துவர்களுக்கு அவர் உத்தரவிட்டார். வனத்துறையினர் மற்றும் மருத்துவக் குழுவினர் யானையை மீட்டெடுக்கப் போராடி வருகின்றனர்.