“ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களே இருக்காது” – சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அதிரடி!
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களே இருக்காது என்ற நிலை உருவாகி வருவதால், நிறுவனங்களை மேலாண்மை செய்பவர்கள் கட்டாயம் ஏஐ தொழில்நுட்பத்தை அறிந்திருக்க வேண்டும் என்று சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி தெரிவித்துள்ளார். ‘அனைவருக்கும் சென்னை ஐஐடி’ என்ற உன்னத நோக்கத்தில், இளங்கலை ஏரோஸ்பேஸ் டெக்னாலஜி, எலக்ட்ரானிக் சிஸ்டம் மற்றும் டேட்டா சயின்ஸ் உள்ளிட்ட நான்கு புதிய இளங்கலை அறிவியல் (BS) பட்டப்படிப்புகளைச் சென்னை ஐஐடி அறிமுகப்படுத்தியுள்ளது.
இதில் ‘இளங்கலை மேலாண்மை மற்றும் தரவு அறிவியல்’ (BS in Management and Data Science) படிப்பைத் தொடங்கி வைத்த இயக்குநர் காமகோடி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஏஐ தொழில்நுட்பத்தின் அவசியத்தை வலியுறுத்தினார். நிர்வாகத் திறன்களுடன் தரவு அறிவியலையும் இணைத்துக் கற்பதன் மூலம், வருங்கால மேலாளர்கள் தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொள்ள முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.