லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு: NIA அறிவிப்பு

Date:

லஷ்கர் பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து தகவல் கொடுத்தால் ரூ.5 லட்சம் பரிசு: NIA அறிவிப்பு

தலைமறைவாக உள்ள லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி ஜுனைத் அகமது குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிரடியாக அறிவித்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு பெங்களூருவில் பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்றத் திட்டமிட்ட கும்பலை போலீஸார் கைது செய்த நிலையில், இந்த வழக்கு NIA-விடம் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில், பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள பயங்கரவாதி நசீர், சிறைக்குள்ளேயே கைதிகளைப் பயங்கரவாதப் பாதையில் தூண்டிய அதிர்ச்சித் தகவல் வெளியானது.

இந்தச் சதித்திட்டத்திற்கு உடந்தையாக இருந்ததாக உதவி காவல் ஆய்வாளர் ஜான் பாஷா, சிறை மருத்துவர் நாகராஜ் மற்றும் ஜுனைத் அகமதுவின் தாயார் அனீஷ் பாத்திமா ஆகியோரை அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளனர். இருப்பினும், இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான ஜுனைத் அகமது தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இதனையடுத்து, அவரது புகைப்படம் மற்றும் முகவரி அடங்கிய சுவரொட்டிகளை வெளியிட்டுள்ள NIA, அவரைப் பற்றிய ரகசியத் தகவல் தருவோருக்குப் பரிசுத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களே இருக்காது” – சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அதிரடி!

"ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களே இருக்காது" - சென்னை ஐஐடி இயக்குநர்...

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 23-ல் கூட்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம்: முருக பக்தர்கள் பேரவை அழைப்பு!

தமிழகம் முழுவதும் பிப்ரவரி 23-ல் கூட்டு கந்த சஷ்டி கவசம் பாராயணம்:...

கொலம்பியா வரலாற்றில் சாதனை: ரூ. பல ஆயிரம் கோடி மதிப்பிலான 17 டன் கொக்கைன் பறிமுதல்!

கொலம்பியா வரலாற்றில் சாதனை: ரூ. பல ஆயிரம் கோடி மதிப்பிலான 17...

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம்: செங்கல்பட்டு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அபராதம்!

ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம்: செங்கல்பட்டு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம்...