நாய்கள் விரட்டியதில் விழுந்த மூதாட்டி – இடுப்பு எலும்பு முறிவு!
கோட்டூர்புரம் பகுதியில் நாய்கள் தாக்கியதில் மூதாட்டி ஒருவர் காயமடைந்தார். அந்தப் பகுதியில் வசிக்கும் சவுந்தர்யா (70) நேற்று முன்தினம் நடந்து சென்று கொண்டிருந்தபோது, அங்கு இருந்த நான்கு நாய்களில் ஒன்று திடீரென அவர்மீது பாய்ந்தது.
இதையடுத்து மற்ற நாய்களும் சேர்ந்து அவரை விரட்டியதால், பயந்த சவுந்தர்யா தப்பிக்க ஓடும்போது சமநிலை இழந்து கீழே விழுந்தார். அப்போது நாய்கள் அவரை சுற்றி கடித்து குதறின.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனே நாய்களை விரட்டி மூதாட்டியை மீட்டனர். பின்னர் அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர். பரிசோதனையில், சவுந்தர்யாவின் இடுப்பு எலும்பு முறிந்திருப்பது தெரியவந்தது. சம்பவம் குறித்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.