தமிழகத்தில் 300 புதிய சுற்றுலா மையங்கள்: அமைச்சர் ராஜேந்திரன் தகவல்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையை சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆய்வு செய்தார். ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, தமிழகத்தில் சுற்றுலாத் துறைக்கு புதிய கொள்கை உருவாக்கப்பட்டு, 300-க்கும் மேற்பட்ட புதிய சுற்றுலா மையங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தை சர்வதேச அளவில் புகழ்பெற்ற சுற்றுலா மையமாக உயர்த்துவதே இலக்கு.
செஞ்சிக்கோட்டைக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவதால், கோட்டையின் அடிவாரம் மற்றும் முக்கிய இடங்களில் குடிநீர், மின்விளக்கு, இருக்கை மற்றும் கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் கூடுதலாக வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.