உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணி: இமானுவேல் மேக்ரான் பாராட்டு

Date:

உலகளாவிய கண்டுபிடிப்புகளில் இந்தியா முன்னணி: இமானுவேல் மேக்ரான் பாராட்டு

உலகளாவிய அளவில் நடைபெறும் கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமைகளில் இந்தியா தலைமை வகிப்பதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பாராட்டியுள்ளார்.

மும்பையில் நடைபெற்ற இந்தியா – பிரான்ஸ் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் பேசிய அவர், உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைப் பொறுப்புகளில் இந்தியர்கள் இருப்பதை சுட்டிக்காட்டினார்.

அதன்படி, Alphabet, Microsoft, IBM, Adobe உள்ளிட்ட நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளாக இந்தியர்கள் செயல்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், உலகப்புகழ் பெற்ற சேனல் நிறுவனத்தின் சிஇஓவும் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர் என்பதையும் நினைவூட்டிய மேக்ரான், புதுமைகளில் இந்தியா வெறும் பங்கேற்பாளராக மட்டுமின்றி, முன்னணி சக்தியாகவும் திகழ்கிறது என தெரிவித்தார்.

“இந்தியா புதுமைகளை உருவாக்குகிறதா என்பது இனி கேள்வியே இல்லை. இந்தியாவுடன் இணைந்து யார் புதுமைகளை உருவாக்குகிறார்கள் என்பதே இன்றைய முக்கியமான கேள்வி” எனவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...