திருமயம் அருகே முதியவரின் கடையை எட்டி உதைத்து சூறையாடிய போலீசார் – வைரலாகும் வீடியோ

Date:

திருமயம் அருகே முதியவரின் கடையை எட்டி உதைத்து சூறையாடிய போலீசார் – வைரலாகும் வீடியோ

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, முதியவர் ஒருவர் நடத்திய தற்காலிக கடையை போலீசார் எட்டி உதைத்து சூறையாடிய சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமயம் அருகேயுள்ள நெய்வாசல் பகுதியில், போலீசாரின் அனுமதியின்றி மஞ்சுவிரட்டு போட்டி நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போட்டியை தடுத்து நிறுத்தினர்.

இதனால், மஞ்சுவிரட்டு போட்டிக்காக வந்திருந்த காளை உரிமையாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் ஏமாற்றமடைந்தனர்.

இந்நிலையில், போட்டி நடைபெறுவதை முன்னிட்டு அந்த பகுதியில் முதியவர் ஒருவர் தண்ணீர் பாட்டில், பழங்கள், கூல் உள்ளிட்டவற்றை விற்பனை செய்ய தற்காலிகமாக கடை அமைத்திருந்தார். அப்போது அங்கு வந்த போலீசார், கடையில் இருந்த பொருட்களை காலால் உதைத்து அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.

ஏழை முதியவரின் கடையை போலீசார் சேதப்படுத்தும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம் சென்னை: மருத்துவப் படிப்பில்...

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது...

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய...

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் முகமது யூனுஸ்

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் முகமது யூனுஸ் வங்கதேசத்தில்...