பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா: 60 அடி தேர் சரிந்து விழுந்து விபத்து – 7 பேர் காயம்

Date:

பாலாற்றங்கரையில் மயானக் கொள்ளை விழா: 60 அடி தேர் சரிந்து விழுந்து விபத்து – 7 பேர் காயம்

வேலூர் பாலாற்றங்கரையில் ஆண்டுதோறும் நடைபெறும் மயானக் கொள்ளை தேர்த்திருவிழா இம்முறையும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த விழாவின் போது, காளி தேவியாக எழுந்தருளிய அம்மன் திருத்தேர் மைதானத்தை நோக்கி புறப்பட்டுச் சென்றது.

வழிநெடுகிலும் திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அம்மனை மனமுருக தரிசனம் செய்தனர். அப்போது, எதிர்பாராதவிதமாக சுமார் 60 அடி உயரம் கொண்ட தேர் திடீரென சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் 7 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஆட்சியர், விபத்து நடந்த இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என விழா குழுவினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம்

மருத்துவப் படிப்பில் 7.5% இடஒதுக்கீடு: சட்டசபையில் கடும் வாக்குவாதம் சென்னை: மருத்துவப் படிப்பில்...

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது – தமிழிசை சௌந்தரராஜன்

தவெக தலைவர் விஜய்யின் அரசியல் பிரவேசம் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது...

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

பிரதமர் மோடியுடன் எஸ்டோனியா அதிபர் அலர் கரிஸ் சந்திப்பு – முக்கிய...

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் முகமது யூனுஸ்

“ஏழு சகோதரிகள்” மாநிலங்கள் குறித்து பேச்சு: மீண்டும் சர்ச்சையில் முகமது யூனுஸ் வங்கதேசத்தில்...