தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே, தர்பூசணி பழங்களை ஏற்றி வந்த சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில், சாலையில் பழங்கள் சிதறி வீணாகின.
திண்டிவனத்தில் இருந்து தர்பூசணி பழங்களை ஏற்றிக் கொண்டு சேலம் நோக்கிச் சென்ற சரக்கு வேன், பெத்தநாயக்கன்பாளையம் அருகே வந்தபோது முன்பக்க டயர் வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் வாகனத்தில் இருந்த தர்பூசணி பழங்கள் சாலையில் கொட்டிச் சிதறி சேதமடைந்தன. மேலும், விபத்தில் காயமடைந்த இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.