நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு
கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசு அலுவலகங்கள் மற்றும் முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுப்பது சமீப காலமாக தொடர்கதையாகி வரும் நிலையில், நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு மர்ம நபர் ஒருவர் இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து, தகவல் அறிந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார், மோப்பநாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளின் உதவியுடன் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
சோதனைக்குப் பின்னர், இது புரளி என தெரியவந்ததை தொடர்ந்து, நிம்மதி நிலவியது.
இந்நிலையில், மிரட்டல் விடுத்த மர்ம நபரை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்