பிரதமர் வருகை: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு

Date:

பிரதமர் வருகை: எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு

பிரதமர் மோடியின் தமிழக வருகை தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், வரவிருக்கும் மார்ச் 1-ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் குறித்து முக்கிய விவாதம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார்.

மேலும், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்தும் இரு தரப்பினரும் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

அதிமுக – பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்ட பின்னர் நடைபெற்ற இந்த சந்திப்பு, இரு கட்சிகளுக்கிடையே நிலவும் நல்லுறவை வெளிப்படுத்துவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு

நாகர்கோவில் தலைமை நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்: பரபரப்பு கன்யாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள...

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை

ரியோ கார்னிவல் அணிவகுப்பில் அரசியல் அம்சங்கள்: பிரேசிலில் சர்ச்சை பிரேசிலின் புகழ்பெற்ற ரியோ...

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம்

டெல்லியில் சர்வதேச ஏஐ உச்சி மாநாடு: பிரதமர் மோடி தொடக்கம் டெல்லியில் நடைபெறும்...

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம்

உறங்கியவர்கள்மீது தண்ணீர் பீய்ச்சி: மாநகராட்சி ஊழியர்களுக்கு எதிராக கண்டனம் கோவை அரசு மருத்துவமனை...