புதுக்கோட்டையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் பிளக்ஸ் பேனர் சர்ச்சை

Date:

புதுக்கோட்டையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற விழாவில் பிளக்ஸ் பேனர் சர்ச்சை

புதுக்கோட்டையில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட விழாவில், பிளக்ஸ் பேனர் தொடர்பாக தி.மு.க.வினரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

துணை முதல்வரை வரவேற்கும் வகையில் நடைபெற்ற விழாவுக்காக, திருமண மண்டபத்திற்கு எதிரே அமைச்சர் ரகுபதி பெயர் அச்சிடப்பட்ட பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதில், அமைச்சர் மெய்யநாதன் மற்றும் தி.மு.க. வடக்கு மாவட்டச் செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் ஆகியோரின் படம் மற்றும் பெயர் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது.

இதனால், கட்சியினரிடையே அதிருப்தி ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து, அமைச்சர் ரகுபதி தரப்பினர், துணை முதல்வர் வருகைக்கு முன்பாகவே பேனரை திருத்தி மீண்டும் அச்சடித்தனர்.

இந்த சம்பவம் விழா நடைபெறும் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதுடன், கட்சி வட்டாரங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27 பேர் காயம்

புனித அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி நத்தம் அருகே ஜல்லிக்கட்டு – 27...

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன் மதுரையில்...

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி

முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து...

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல்

ஜூலை தேசிய சாசனத்திற்கு 70% ஆதரவு: வங்கதேசத்தில் சீர்திருத்தங்களுக்கு மக்கள் ஒப்புதல் வங்கதேசத்தில்...