மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய எஸ். ராமதாஸ் மனு நிராகரம்

Date:

மாம்பழம் சின்னத்தை முடக்க கோரிய எஸ். ராமதாஸ் மனு நிராகரம்

பா.ம.க. யாருக்கு? என்ற விவகாரத்தில் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணி ராமதாஸ்க்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. இந்த நிலையில், பா.ம.க.க்கு மாம்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்து, தேர்தல் ஆணையம் அன்புமணி முகவரிக்கு கடிதம் அனுப்பியது. இதை ரத்து செய்யுமாறு கோரி மதராஸ் உயர்நீதிமன்றம்த்தில் டாக்டர் ராமதாஸ் வழக்கு தொடர்ந்தார்.

அந்த மனுவில், 2025ஆம் ஆண்டு மே மாதத்திலேயே அன்புமணியின் தலைவர் பதவிக்காலம் முடிந்துவிட்டதாகவும், எனவே தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு தன்னுடைய முகவரிக்கே அனுப்பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இதுகுறித்து தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று முன்பு உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், டாக்டர் ராமதாஸ் புதிதாக மேலும் இரண்டு மனுக்களை தாக்கல் செய்தார். அதில் ஒன்றில், “பா.ம.க. தலைவராக நானே உள்ளேன். இதுதொடர்பான வழக்கு டெல்லி உயர்நீதிமன்றம்த்தில் விசாரிக்கப்பட்டபோது, கட்சியின் உள்துறை தேர்தலை நடத்தி தலைவராக தேர்வு செய்யப்பட்டதை உறுதிப்படுத்தும் பரிந்துரை கடிதம் அனுப்பினால் அதை பதிவு செய்து அங்கீகரிப்போம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

அதன்படி தலைவராக பதிவு செய்யுமாறு நான் அனுப்பியுள்ள கடிதத்தை இதுவரை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கவில்லை. தற்போது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் எந்நேரமும் தேர்தல் அறிவிப்பு வெளியாகக்கூடும். எனவே, என்னை பா.ம.க. தலைவராக அங்கீகரித்து பதிவு செய்யும்வரை தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்பை வெளியிடக் கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

மற்றொரு மனுவில், “பா.ம.க.வின் தேர்தல் சின்னமான மாம்பழத்தை, கட்சியுடன் தொடர்பில்லாத சிலர் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இந்த சின்னத்தை வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்றும், இந்த மாம்பழம் சின்னம் எனக்கும், நான் தலைவராக உள்ள பா.ம.க.விற்கும் மட்டுமே சொந்தமானது என அறிவிக்க வேண்டும்” என்றும் கூறியிருந்தார்.

இந்த இரண்டு மனுக்களும் தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருள் முருகன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “இந்த இரண்டு மனுக்களையும் தள்ளுபடி செய்கிறோம். இவை விசாரணைக்கு பொருத்தமானவை அல்ல. ஒரு அரசியல் கட்சியின் உள்நிலை விவகாரம் குறித்து நிவாரணம் பெற சிவில் நீதிமன்றத்தையே அணுக வேண்டும்.

சிவில் நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் பின்னர் தேர்தல் ஆணையத்தை அணுகலாம். இந்த விவகாரத்தில் தந்தை, மகன் இடையே என்ன பிரச்சனை உள்ளது? ஏன் தந்தையின் பேச்சை மகன் கேட்பதில்லை?” என்று கேள்வி எழுப்பினர். அதற்கு ராமதாஸ் தரப்பில், “தந்தையின் கருத்தை மகன் ஏற்கவில்லை” என்று பதிலளிக்கப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “பா.ம.க. அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியாக இருப்பதால், இதில் உயர்நீதிமன்றம் தலையிட முடியாது. அதேபோல், ராமதாசுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கி வைத்து, பிறருக்கு வழங்காமல் தடுக்கவும் இயலாது” என்று தெரிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற நேரத்தை வீணாக்கியதற்காக ராமதாசுக்கு அபராதம் விதிக்க நேரிடலாம் என எச்சரித்த நீதிபதிகள், வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தவெக – காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் துரோகம் செய்த ராகுல் காந்தி

தவெக - காங்கிரஸ் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் துரோகம் செய்த ராகுல் காந்தி...

கேரளாவில் பயங்கரம்: பிரபல ரவுடி கும்பல் தலைவன் ‘அலுவா அதுல்’ சினிமா பாணியில் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

கேரளாவில் பயங்கரம்: பிரபல ரவுடி கும்பல் தலைவன் 'அலுவா அதுல்' சினிமா...