தாயகம் திரும்பிய மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை
இலங்கையிலிருந்து நீலகிரி மாவட்டத்திற்கு திரும்பிய மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
கோத்தகிரி பகுதியில் இலங்கையிலிருந்து தாயகம் திரும்பிய தமிழர்களின் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இலங்கை கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செந்தில் தொண்டமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த செந்தில் தொண்டமான், தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், குடியிருப்பு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்கவும் அரசிடம் கோரிக்கை வைக்கப்படும் என தெரிவித்தார்.