என்டிஏ கூட்டணியில் என்.ஆர். காங்கிரஸ் தொடரும்: முதலமைச்சர் ரங்கசாமி
தேசிய ஜனநாயக கூட்டணியில் (என்டிஏ) என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து இடம்பெறும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
பாஜக நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காரைக்காலில் உள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தார். அங்கு அவரை முதலமைச்சர் ரங்கசாமி நேரில் சந்தித்து, தேர்தல் பணிகள், தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, தேசிய ஜனநாயக கூட்டணியிலேயே என்.ஆர். காங்கிரஸ் தொடர்ந்து செயல்படும் என உறுதிபட தெரிவித்தார்.