18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் ஏஐ பெரும் தாக்கம் – மைக்ரோ

Date:

18 மாதங்களில் வேலை வாய்ப்பு சந்தையில் ஏஐ பெரும் தாக்கம் – மைக்ரோ

அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் வேலை வாய்ப்பு சந்தையில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என மைக்ரோ நிறுவனத்தின் அதிகாரி முஸ்தபா சுலேமான் தெரிவித்துள்ளார்.

ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக, குறிப்பாக ஒயிட் காலர் பணிகளில் பெரும் சரிவு ஏற்படலாம் என துறை சார்ந்த நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.

இதுகுறித்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவு தலைவர் முஸ்தபா சுலேமான் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தினசரி கணினி முன் அமர்ந்து சட்டம், கணக்கியல், மார்க்கெட்டிங், திட்ட மேலாண்மை போன்ற பணிகளில் ஈடுபடுபவர்களின் வேலைகளை ஏஐ தானியங்கி முறையில் மேற்கொள்ளும் வாய்ப்பு அதிகம் என அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த மாற்றம் வேலை வாய்ப்பு சந்தையில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். இதன் மூலம் பல துறைகளில் பணியிட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி கடும் எதிர்ப்பு!

தேர்தல் விதிகளில் பாகுபாடு காட்டக்கூடாது: முஸ்லிம் லீக் கோரிக்கைக்கு இந்து முன்னணி...

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் – சிறப்புத் தொகுப்பு

ஈரானின் ‘ட்ரோன்’ போர் உத்தி: இந்திய பாதுகாப்புத்துறையில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள்...

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி ஒதுக்கீடு – பிரதமர் மோடி தலைமையில் ஒப்புதல்!

மத்திய அமைச்சரவை அதிரடி: 100 தொழில் பூங்காக்கள் அமைக்க ரூ.33,660 கோடி...

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் ‘வான் அமிர்தம்’ கருத்தரங்கம் – காவேரி கூக்குரல் இயக்கம் அறிவிப்பு!

உலக தண்ணீர் தினம்: திருச்சியில் 'வான் அமிர்தம்' கருத்தரங்கம் – காவேரி...