தென்காசி நகராட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு: பாஜக–சுயேட்சை கவுன்சிலர்கள் மோதல்

Date:

தென்காசி நகராட்சி கூட்டத்தில் தள்ளுமுள்ளு: பாஜக–சுயேட்சை கவுன்சிலர்கள் மோதல்

தென்காசி: தென்காசி நகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தின் போது (பாஜக) கவுன்சிலர் மற்றும் சுயேட்சை கவுன்சிலர் இடையே வாக்குவாதம் தள்ளுமுள்ளுவாக மாறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மங்கம்மா சாலை பகுதியில், தனியார் சார்பில் வீட்டு மனை பிரிப்பதற்கான திட்டத்திற்கு நகராட்சிக்கு கட்டணம் செலுத்தாமல் ஒப்புதல் வழங்கும் தீர்மானம் கூட்டத்தில் முன்வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பாஜக கவுன்சிலர் சங்கர சுப்பிரமணியன் மற்றும் நகரமைப்பு அலுவலர் அப்துல் காதர் விவாதித்து கொண்டிருந்தபோது, சுயேட்சை கவுன்சிலர் முகமது ராஜப்பா இடையூறு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் நிலைமை தீவிரமடைந்து தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த சம்பவம் நகராட்சி வளாகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழலை உருவாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி

புல்வாமா வீரர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர் மோடி புல்வாமா தாக்குதலின் 7-ஆம்...

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு தேர்வு: மதிப்பெண் சரிபார்ப்பு நடைமுறை ரத்து சிபிஎஸ்இ 12-ஆம்...

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல்

2016–2022 காலகட்டத்துக்கான திரைப்பட, சின்னத்திரை விருதுகள் ஒரே மேடையில் வழங்கல் 2016 முதல்...

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும் அதிர்ச்சி

கனடா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் உயிரிழப்பு – நாடு முழுவதும்...