நீலகிரி: மசினக்குடியில் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு

Date:

நீலகிரி: மசினக்குடியில் ‘ரிவால்டோ’ யானை உயிரிழப்பு

நீலகிரி: பகுதியில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ‘ரிவால்டோ’ என்ற காட்டு யானை உயிரிழந்தது.

காப்பக எல்லைகளில் சுற்றித்திரிந்த இந்த யானையின் தும்பிக்கையில் கடந்த ஆண்டு காயம் ஏற்பட்டதாக வனத்துறை தெரிவித்தது. அப்போது கால்நடை மருத்துவ குழு சிகிச்சை அளித்து, அதன் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது.

அண்மையில் யானைக்கு மீண்டும் உடல்நலப் பிரச்சினை ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மசினக்குடி பகுதியில் உள்ள ஒரு வாழைத்தோட்டத்தில் யானை உயிரிழந்த நிலையில் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை அதிகாரிகள், யானையின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பினர். இதனிடையே, தேவையான சிகிச்சை காலதாமதமாக வழங்கப்பட்டதால் யானை உயிரிழந்ததாக உள்ளூர் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

யானையின் மரணத்திற்கான துல்லியமான காரணம் குறித்து வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

எழில்மிகு புளியஞ்சோலை: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி

எழில்மிகு புளியஞ்சோலை: அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி திருச்சி: இயற்கை...

ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம்

ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம் காரைக்கால்: “ராகுல் காந்தி பொய்...

ரூ.5,000 உரிமைத் தொகை திருப்பி அனுப்பு: சமூக ஆர்வலரின் நடவடிக்கை கவனம் ஈர்ப்பு

ரூ.5,000 உரிமைத் தொகை திருப்பி அனுப்பு: சமூக ஆர்வலரின் நடவடிக்கை கவனம்...

27,000 அடி உயரத்தில் என்ஜின் கோளாறு: சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய விமானிகள்

27,000 அடி உயரத்தில் என்ஜின் கோளாறு: சாதுரியமாக செயல்பட்டு பயணிகளை காப்பாற்றிய...