ராகுல் காந்தி மீது அமித்ஷா கடும் விமர்சனம்
காரைக்கால்: “ராகுல் காந்தி பொய் பேசுவதையே தன்னுடைய தொழிலாக வைத்துள்ளார்” என மத்திய உள்துறை அமைச்சர் கடுமையாக விமர்சித்தார்.
மாநிலம் காரைக்கால் சந்தைத் திடலில் “நல்லாட்சி தொடரட்டும், புதுவை மலரட்டும்” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷாவுக்கு ஏலக்காய் மாலை மற்றும் வெள்ளி முருகர் சிலை நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.
பேச்சின் போது, காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் புதுச்சேரியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குறித்த வழக்குகளை விசாரித்து வருவதாக அவர் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் ஆட்சியில் புதுச்சேரியில் தொழில்துறை வளர்ச்சி ஏற்படவில்லை என குற்றஞ்சாட்டிய அவர், NDA கூட்டணி ஆட்சி ஊழலை கட்டுப்படுத்தியுள்ளதாக கூறினார்.
தேசிய பாதுகாப்பு தொடர்பாக பேசிய அவர், தலைமையிலான ஆட்சியில் தீவிரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக தெரிவித்தார். ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுடன் செய்யப்பட்ட வர்த்தக ஒப்பந்தங்கள் மீனவர்கள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு பயனளிக்கும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, குறித்து கடுமையாக விமர்சனம் செய்த அமித்ஷா, அவர் தவறான தகவல்களை பரப்புவதாக குற்றம்சாட்டினார்.
இந்த கூட்டம் அரசியல் ரீதியாக கவனம் ஈர்த்துள்ளது.