பிப்ரவரி 18-ம் தேதி இந்தியா வருகிறார் பிரேசில் அதிபர் லுலா டா சில்வா
ஏஐ உச்சிமாநாடு மற்றும் இருதரப்பு பேச்சுவார்த்தை திட்டம்
பிரேசில் அதிபர் , வரும் பிப்ரவரி 18-ம் தேதி ஐந்து நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வர உள்ளார்.
யில் பிப்ரவரி 19 மற்றும் 20 தேதிகளில் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சிமாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் தலைவர்கள், உயர்நிலை பிரதிநிதிகள் மற்றும் தொழில்நுட்பத் துறை நிறுவனங்களின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்கும் நோக்கில் லுலா டா சில்வா இந்தியா வருகிறார். மேலும், இந்திய பிரதமர் மற்றும் பிரேசில் அதிபர் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தை பிப்ரவரி 21-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த சந்திப்பு, இந்தியா–பிரேசில் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.