தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை மெதுவாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல்

Date:

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு வெப்பநிலை மெதுவாக அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மேலடுக்கு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதாக கூறப்பட்டுள்ளது. இதன் விளைவாக நாளை (15ஆம் தேதி) ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளை அதிகாலை சில இடங்களில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.

16ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் ஏற்படக்கூடும்.

17ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும், 18ஆம் தேதி சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காஞ்சீபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களிலும் நாளை அதிகாலை லேசான பனிமூட்டம் காணப்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 32°C மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22°C அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (14ஆம் தேதி) மற்றும் நாளை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக உயரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல்துறை எச்சரிக்கை

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் –...

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன் பாகவத் வலியுறுத்தல்

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன்...

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியீடு

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள்...

ஜூனியர் உலகக்கோப்பை வெற்றி – தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை

ஜூனியர் உலகக்கோப்பை வெற்றி – தமிழக வீரர்களுக்கு ஊக்கத்தொகை இந்திய அணியில் இடம்பெற்ற...