வைகை ஆற்றில் மணல் எடுக்க தடை – மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு

Date:

வைகை ஆற்றில் மணல் எடுக்க தடை – மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு

பாலம் பணிகள் தொடர்பான குற்றச்சாட்டில் விசாரணை நடத்த உத்தரவு

முழுவதும் மணல் எடுப்பதற்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆரப்பாளையம் அருகே வைகை ஆற்றின் வடக்கு பகுதியில் சுமார் 8 கிலோமீட்டர் நீளத்திற்கு பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளுக்காக சட்டவிரோதமாக மணல் எடுக்கப்படுவதாகக் கூறி, வைகை ராஜன் என்பவர் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

அவரது மனுவில், மணல் கொள்ளை குறித்து தனிப்பட்ட குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாலம் அமைக்கும் பணிகளை தற்காலிகமாக நிறுத்த இடைக்கால உத்தரவு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி அமர்வு, வைகை ஆற்றின் எந்தப் பகுதியிலும் மணல் எடுக்கக் கூடாது என்று தடை விதித்தனர்.

மேலும், மனுதாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான விசாரணை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய பொதுப்பணித்துறை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

“அடுத்தவர் குதிரையில் சவாரி” – தவெக தலைவர் விஜயை அதிமுக கடுமையாக விமர்சிப்பு

“அடுத்தவர் குதிரையில் சவாரி” – தவெக தலைவர் விஜயை அதிமுக கடுமையாக...

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் – பல்லடம் காவல்துறை எச்சரிக்கை

வெளியூர் செல்லும் போது நகை, பணத்தை பீரோவில் வைக்க வேண்டாம் –...

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன் பாகவத் வலியுறுத்தல்

விலங்குகள் மற்றும் இயற்கையுடன் மனிதர்கள் இணக்கமாக வாழ வேண்டும் – மோகன்...

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள் வெளியீடு

சட்டமன்ற தேர்தல் முன் அவசர நடவடிக்கை? 12 நாட்களில் 4,385 டெண்டர்கள்...