“மகளிர் உரிமை தொகை திட்டம் 2 ஆண்டுகள் ஏன் தாமதம்?” – தமிழிசை கேள்வி

Date:

“மகளிர் உரிமை தொகை திட்டம் 2 ஆண்டுகள் ஏன் தாமதம்?” – தமிழிசை கேள்வி

திமுக அரசை கடுமையாக விமர்சித்த பாஜக மூத்த தலைவர்

மகளிர் உரிமை தொகை திட்டம் அறிவிக்கப்பட்ட பின்னரும், அதை இரண்டு ஆண்டுகள் தாமதமாக செயல்படுத்தியதற்கான காரணத்தை அரசு விளக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் வலியுறுத்தினார்.

தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், மகளிருக்கு ரூ.5,000 வழங்கப்படும் என அறிவித்தது தேர்தல் நோக்கத்திற்கான நடவடிக்கை போல தெரிகிறது என அவர் விமர்சித்தார். திட்டம் அறிவிக்கப்பட்ட நேரத்திலேயே நடைமுறைக்கு வராமல் தாமதமானது ஏன் என்பதை திமுக அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், மக்கள் நலன் குறித்து பேசும் அரசு, டாஸ்மாக் விற்பனையை நிறுத்தாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அரசு எதை அறிவித்தாலும் மக்கள் இனி ஏமாறமாட்டார்கள் என்றும், மக்களை தவறாக வழிநடத்துவதே திமுக அரசின் நோக்கம் எனவும் தமிழிசை செளந்தரராஜன் குற்றம்சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

அமெரிக்காவை திருப்திப்படுத்திய இரண்டு சர்வாதிகாரிகள்” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கடும் குற்றச்சாட்டு

“அமெரிக்காவை திருப்திப்படுத்திய இரண்டு சர்வாதிகாரிகள்” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சரின் கடும்...

வீடுகள் முழுவதும் ஓவியங்கள்; கிராமம் முழுவதும் கலை – ஒடிசாவின் ரகுராஜ்பூர் சிறப்பு தொகுப்பு

வீடுகள் முழுவதும் ஓவியங்கள்; கிராமம் முழுவதும் கலை – ஒடிசாவின் ரகுராஜ்பூர்...

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்துடன் தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இபிஎஸ் குடும்பத்துடன் தரிசனம் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி...

“சட்டம்-ஒழுங்கே கட்டுப்பாட்டுக்கு வெளியே” – திமுக ஆட்சியை விமர்சித்த விஜய்

“சட்டம்-ஒழுங்கே கட்டுப்பாட்டுக்கு வெளியே” – திமுக ஆட்சியை விமர்சித்த விஜய் சேலம் மக்கள்...