“சட்டம்-ஒழுங்கே கட்டுப்பாட்டுக்கு வெளியே” – திமுக ஆட்சியை விமர்சித்த விஜய்
சேலம் மக்கள் சந்திப்பில் கடும் குற்றச்சாட்டு முன்வைத்த தவெக தலைவர்
சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு கூட்டத்தில், தவெக தலைவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார்.
தமிழ்நாடு எப்போதும் டெல்லி கட்டுப்பாட்டுக்கு வெளியே இருப்பதாக முதலமைச்சர் கூறி வருகிறார் என்றும், ஆனால் உண்மையில் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைதான் திமுக ஆட்சியில் கட்டுப்பாட்டுக்கு வெளியே சென்றுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பெண்கள் பாதுகாப்பு மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பிரச்சினைகளிலும் அரசு சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என விமர்சித்தார். மாநிலம் நன்றாக செயல்பட்டு வருகிறதெனில், தொழிலாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஏன் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபடுகின்றனர்? என அவர் கேள்வி எழுப்பினார்.
ஆட்சிக்கு வரும் போதும், ஆட்சியில் இருந்து வெளியேறும் போதும் பொய்யான வாக்குறுதிகளை வழங்குவது திமுகவின் வழக்கமாகி விட்டதாகவும் விஜய் தெரிவித்துள்ளார்.