அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

Date:

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பல்வேறு அரசு ஊழியர் சங்கங்களின் ஒருங்கிணைந்த போராட்டத்தால் பரபரப்பான சூழ்நிலையாக மாறியது.

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் மற்றும் மகப்பேறு விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி மற்றும் சத்துணவு பணியாளர்கள் தொடர்ந்து 9வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல், நிரந்தர காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தினரும் போராட்டத்தில் களமிறங்கினர்.

மேலும், 18 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்பட்டது.

மூன்று சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் ஒரே நேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் போராட்டக் களமாக மாறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி மீது சின்ன உடைப்பு கிராம மக்களின் எதிர்ப்பு தீவிரம்

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி...

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு அமெரிக்கா...

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள்...