• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
சனிக்கிழமை, மார்ச் 28, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

athibantv by athibantv
பிப்ரவரி 10, 2026
in Tamil-Nadu
A A
0
👁️ 2.5K 🔥

உதகை ரேஸ் கிளப்பில் பூங்கா வேண்டாம் – பன்னடுக்கு பார்க்கிங் அமைக்க மக்கள் வலியுறுத்தல்

உதகை நகரின் மையத்தில் அமைந்துள்ள ரேஸ் கிளப்பிலிருந்து மீட்கப்பட்ட நிலப்பரப்பில் சூழலியல் பூங்கா அமைக்க அரசால் எடுக்கப்பட்ட முடிவுக்கு, அப்பகுதி குடியிருப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நகரில் நீண்ட காலமாக நீடித்து வரும் போக்குவரத்து சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், அந்த இடத்தில் பன்னடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

இயற்கை அழகில் சிறந்து விளங்கும் நீலகிரி மாவட்டம், தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகளை அதிக அளவில் ஈர்த்து வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து தனியார் வாகனங்களிலும், சுற்றுலா பேருந்துகளிலும் உதகைக்கு வரும் பயணிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆனால், வாகனங்களை நிறுத்துவதற்கு போதிய இட வசதி இல்லாததால், சாலைகளின் ஓரங்களில் வாகனங்களை நிறுத்த வேண்டிய சூழல் உருவாகி, அதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், வரி செலுத்தப்படாத காரணத்தால் அரசால் கைப்பற்றப்பட்ட உதகை மையப்பகுதியில் உள்ள குதிரைப் பந்தய மைதானத்தில், வாகன நிறுத்துமிடம் அமைப்பதற்கு பதிலாக பூங்கா உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு, உள்ளூர் மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

RelatedPosts

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மார்ச் 28, 2026
மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மார்ச் 28, 2026

உதகை நகரில் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், உலகப்புகழ் பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, நூற்றாண்டு ரோஜா பூங்கா, தேயிலை பூங்கா, மரவியல் பூங்கா, கர்நாடக அரசின் கட்டுப்பாட்டிலுள்ள கர்நாடக பூங்கா உள்ளிட்ட பல பூங்காக்கள் ஏற்கனவே உள்ளன. இதற்கு மேலாக, உதகை நகராட்சி நிர்வாகத்தின் கீழ் சுமார் பத்து மற்றும் அதற்கு மேற்பட்ட சாலையோர பூங்காக்களும் செயல்பட்டு வருகின்றன. இவ்வளவு பூங்காக்கள் இருக்கும் சூழலில், மேலும் ஒரு பூங்கா தேவையற்றது என்றும், அந்த நிலத்தில் நவீன வசதிகளுடன் கூடிய பன்னடுக்கு பார்க்கிங் அமைப்பதே நகர வளர்ச்சிக்கு உகந்தது என்றும் பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சுற்றுலா பகுதிகளில் சூழலியல் பூங்காக்கள் அவசியமானவை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், தற்போதைய சூழலில் உதகை நகரை வாட்டி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கு உடனடி தீர்வு அளிக்கும் வகையில் வாகன நிறுத்துமிடம் அமைப்பதே சிறந்த முடிவாக இருக்கும் என்பதே உதகை பகுதி மக்களின் ஒருமித்த நிலைப்பாடாக உள்ளது

Related

Tags: Tamil-Nadu
Previous Post

தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள் பராமரிப்பின்றி சேதமடைந்துள்ளன – விஹெச்பி குற்றச்சாட்டு

Next Post

அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு – நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி

RelatedPosts

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

நெல்லை: கஞ்சா வியாபாரியால் கட்டிடத் தொழிலாளி வெட்டிக்கொலை – முன்பகை காரணமாக நடந்த கொடூரச் சம்பவம்!

மார்ச் 28, 2026
மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மதுரையில் அவசர கதியில் அமைக்கப்பட்ட தார் சாலை: கையோடு பெயர்ந்து வரும் அவலத்தால் அவனியாபுரம் மக்கள் கொதிப்பு!

மார்ச் 28, 2026
அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

அமமுக தேர்தல் அறிக்கை வெளியீடு: விவசாயக் கடன்கள் தள்ளுபடி, சட்ட மேலவை உருவாக்கம் – டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு!

மார்ச் 28, 2026
பட்டியலின மக்களுக்கான ரூ.7,000 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டது” – தமிழக அரசு மீது ஏர்போர்ட் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

பட்டியலின மக்களுக்கான ரூ.7,000 கோடி நிதி திருப்பி அனுப்பப்பட்டது” – தமிழக அரசு மீது ஏர்போர்ட் மூர்த்தி பரபரப்பு குற்றச்சாட்டு!

மார்ச் 28, 2026
அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு: சைதாப்பேட்டையில் செந்தமிழன், திருச்சி மேற்கில் ராஜசேகரன் போட்டி!

மார்ச் 28, 2026
Next Post
Home

அங்கன்வாடி சத்துணவு பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு – நேரில் சந்தித்த எஸ்.பி.வேலுமணி

Home

ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கும் முதல்வர் ஸ்டாலின் – விபர பட்டியலுடன் பதிலளித்த அஸ்வினி வைஷ்ணவ்

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...

பிரபலமான செய்தி

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!

மார்ச் 28, 2026
“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

“பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!

மார்ச் 28, 2026
மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

மார்ச் 28, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • வேட்பாளர் தேர்வா? ஏல அறிவிப்பா? – கொந்தளித்த ஜோதிமணி: கலகலக்கும் திமுக கூட்டணி!
  • “பிரதமர் மோடியுடன் இணைந்து பணியாற்ற ஆவல்” – நேபாள பிரதமர் பாலேந்திர ஷா நெகிழ்ச்சிப் பதிவு!
  • மோடி – டிரம்ப் தொலைபேசி உரையாடலில் எலான் மஸ்க்? – மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.