தெற்கு சூடானில் கோடிக்கணக்கான மக்கள் நெருக்கடியில் – ஐநா பொதுச் செயலாளர் எச்சரிக்கை
தெற்கு சூடானில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வலியுறுத்தியுள்ளார்.
வட ஆப்ரிக்கப் பகுதிக்குட்பட்ட சூடான் நாட்டில், கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுப் படைகளுக்கும், ஆர்எஸ்எப் எனப்படும் துணை ராணுவ அமைப்புக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக உள்நாட்டு மோதல் நீடித்து வருகிறது.
இந்த நீண்டகால போரின் விளைவாக, உணவு உற்பத்தி முற்றிலும் சீர்குலைந்ததோடு, விநியோகச் சங்கிலியும் பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டில் கடும் உணவுத்தட்டுப்பாடு மற்றும் பஞ்ச நிலை உருவாகியுள்ளது.
இந்த சூழ்நிலையை கடுமையாக கண்டித்துள்ள அன்டோனியோ குட்டரெஸ், சுமார் ஒரு கோடி மக்களின் உயிர் அபாயத்தில் இருப்பதாகவும், அவர்களை பாதுகாக்க உடனடி மனிதாபிமான உதவிகள் அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.