சென்னையில் ‘வாத்ஸல்ய பாவம்’ பெயரில் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
சென்னை கொளத்தூர் பகுதியில் நடைபெற்ற சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான மருத்துவ சிகிச்சை முகாம், பல குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் பெரும் உதவியாக அமைந்தது.
கொளத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் இந்த மருத்துவ முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோவை அரி பவுண்டேஷன், கலைகளின் ஆய்வு நிறுவனம் மற்றும் திருமூலர் வேத சக்தி அகாடமி ஆகிய அமைப்புகள் இணைந்து, ‘வாத்ஸல்ய பாவம்’ என்ற பெயரில் இந்த சேவை நிகழ்ச்சியை நடத்தின.
இந்த முகாமில், சிறப்பு குழந்தைகளுக்கான வேத சக்தி சிகிச்சை, வேதப்புள்ளி முறைகள் மற்றும் வர்ம–மர்ம மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டன. இதில் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
மேலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அவர்களது பெற்றோருக்கு விளக்கமும், பயிற்சியும் வழங்கப்பட்டு, முகாம் முழுமையான வழிகாட்டி நிகழ்வாக அமைந்தது