டல்லஸ் சென்றால் பாகிஸ்தானில் இருப்பது போல உணர்வு – குடியரசு கட்சி எம்.பி கருத்து சர்ச்சை
அமெரிக்காவின் டல்லஸ் நகரத்திற்கு செல்லும் போது, தாம் பாகிஸ்தானில் இருப்பதைப் போன்ற அனுபவம் ஏற்படுகிறது என்று குடியரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிராண்டன் கில் தெரிவித்துள்ள கருத்து, தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெக்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த எம்.பியான பிராண்டன் கில், சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், டல்லஸ் நகரில் உள்ள வணிக வளாகங்களுக்கு செல்வதற்குப் போது, “நாம் உண்மையில் அமெரிக்காவின் டல்லஸில்தானா, அல்லது பாகிஸ்தானிலா இருக்கிறோம்?” என்ற கேள்வி தமது தொகுதி மக்களிடையே எழுகிறது என்று கூறியுள்ளார்.
மேலும், அதிக அளவில் நடைபெறும் இஸ்லாமிய குடியேற்றம், தாங்கள் நேசிக்கும் அமெரிக்காவின் அடையாளத்தையே சிதைத்து வருகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
இந்த கருத்துகள் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் விமர்சனத்தையும், தீவிர விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளன.