மாணவியர் விடுதி அருகே அரசு அனுமதியுடன் திறக்கப்படும் மதுபான மன்றம் – மக்கள் கடும் எதிர்ப்பு

Date:

மாணவியர் விடுதி அருகே அரசு அனுமதியுடன் திறக்கப்படும் மதுபான மன்றம் – மக்கள் கடும் எதிர்ப்பு

கோவை ஒண்டிப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மாணவியர் விடுதிக்கு மிக அருகாமையில் தனியார் மதுபான மன்றம் தொடங்க அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளதற்கு, அப்பகுதி மக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பட்டணம் சாலையில் தமிழக அரசின் சமூகநீதி துறையின் கீழ் இயங்கி வரும் மாணவியர் விடுதி அமைந்துள்ள நிலையில், அதன் அருகிலேயே தனியார் நிறுவனம் நடத்தும் மதுபானக் கூடம் அமைக்கப்பட உள்ளது.

‘மனமகிழ் மன்றம்’ என்ற பெயரில் தொடங்கப்படவுள்ள இந்த மதுபான நிலையத்திற்கு வழங்கப்பட்ட அனுமதி, பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவிகள் தங்கியிருக்கும் விடுதி கட்டடத்திற்கு அருகில் மதுபானக் கூடம் அமைக்க அரசு ஒப்புதல் அளித்திருப்பது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கு குறித்த கவலைகளை எழுப்புவதாகவும், இதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே துறையின் பொருளாதார நிலை கணிசமாக உயர்வு – அஸ்வினி வைஷ்ணவ்

கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே துறையின் பொருளாதார நிலை கணிசமாக உயர்வு...

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் – இருவர் காயம்

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் – இருவர்...

மாணவர் ஸ்டார்டப் முயற்சிகளுக்கு ரூ.1000 கோடி வரை முதலீடு

மாணவர் ஸ்டார்டப் முயற்சிகளுக்கு ரூ.1000 கோடி வரை முதலீடு மாணவர்கள் தொடங்கும் ஸ்டார்டப்...

கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – தவிப்பில் சிக்கிய அமைச்சர்

கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – தவிப்பில் சிக்கிய அமைச்சர் சிவகங்கை...