மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார் எல்.முருகன்

Date:

மத்திய பட்ஜெட்டின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார் எல்.முருகன்

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்து பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவை நிறைவேற்றும் வகையில் மத்திய பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த பட்ஜெட் இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டதுடன், நாட்டின் அடிப்படை வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் அமைந்துள்ளதாக அவர் கூறினார்.

மேலும், வரவிருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் தேசிய ஜனநாயக கூட்டணி அனைத்து மாநிலங்களிலும் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் உறுதியாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே துறையின் பொருளாதார நிலை கணிசமாக உயர்வு – அஸ்வினி வைஷ்ணவ்

கடந்த பத்து ஆண்டுகளில் ரயில்வே துறையின் பொருளாதார நிலை கணிசமாக உயர்வு...

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் – இருவர் காயம்

கோவில்பட்டி அருகே கும்பாபிஷேகத்தில் பக்தர்கள் மீது விழுந்த ட்ரோன் – இருவர்...

மாணவர் ஸ்டார்டப் முயற்சிகளுக்கு ரூ.1000 கோடி வரை முதலீடு

மாணவர் ஸ்டார்டப் முயற்சிகளுக்கு ரூ.1000 கோடி வரை முதலீடு மாணவர்கள் தொடங்கும் ஸ்டார்டப்...

கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – தவிப்பில் சிக்கிய அமைச்சர்

கும்பாபிஷேக நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் – தவிப்பில் சிக்கிய அமைச்சர் சிவகங்கை...