பட்டமளிப்பு விழாவில் திருக்குறளை தவறாக மேற்கோளிட்ட அமைச்சர் கோவி.செழியன்
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சரும் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தருமான கோவி. செழியன் பங்கேற்றார்.
விழாவில் உரையாற்றிய அவர், மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் திருக்குறளை மேற்கோளாக எடுத்துக் கூறினார். ஆனால், அந்த திருக்குறளை அவர் சரியாக சொல்லாமல் பிழையுடன் உச்சரித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து, “தமிழை வளர்த்ததாக பெருமை பேசும் திமுகவின் நிலை இதுதானா?” என சமூக வலைதள பயனர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், திமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சரே இவ்வாறு திருக்குறளை தவறாக கூறுவது வருத்தமளிப்பதாகவும், கடுமையான விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.