கூட்டணி பேச்சுவார்த்தைக்காக பாஜக சார்பில் தனிக்குழு அமைப்பு
தேசிய ஜனநாயக கூட்டணியில் கூடுதல் அரசியல் கட்சிகள் இணைவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், அதனை முன்னிட்டு பேச்சுவார்த்தை நடத்தும் வகையில் பாஜக சார்பில் தனிப்பட்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு, பல அரசியல் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக, பாஜக சார்பில் அதிகாரப்பூர்வ குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த குழுவின் தலைவராக வி.பி. துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளதாகவும், துணைத் தலைவராக பாலச்சந்திரன் பொறுப்பேற்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.