திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் உயிர் அச்சுறுத்தல் – தேனி எஸ்பியிடம் பொதுமக்கள் முறையீடு

Date:

திமுக பிரமுகரின் ஆதரவாளர்கள் உயிர் அச்சுறுத்தல் – தேனி எஸ்பியிடம் பொதுமக்கள் முறையீடு

திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரின் ஆதரவாளர்கள் தங்களுக்கு உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் வகையில் மிரட்டல் விடுப்பதாக தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட தரப்பினர் புகார் மனு அளித்துள்ளனர்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள போடிதாசன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருடன், சில தினங்களுக்கு முன்பு திமுக நிர்வாகி சுப்புராஜ் என்பவர் மது அருந்திய நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, சுப்புராஜின் மகன் பவுன்ராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் பாலமுருகனை போலீசார் கைது செய்தனர். அதேபோல், பாலமுருகனின் தாய் ஜோதி அளித்த புகாரின் பேரில், பவுன்ராஜுடன் தொடர்புடைய மற்றொரு நபரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில், பவுன்ராஜும் அவருடன் சேர்ந்த சிலரும் தங்களை தொடர்ந்து கொலை மிரட்டல் விடுப்பதாகவும், பொய்யான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தனது மகன் பாலமுருகனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் கோரி, ஜோதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை சாடிய நயினார் நாகேந்திரன்

தமிழக பெண்களுக்கும் வெளியூர்ப் பெண்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் – திமுக அரசை...

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ அறிவிப்பு

‘தி வேர்ல்ட் ஃபேக்டர் புக்’ தகவல் சேவைக்கு முடிவு – சிஐஏ...

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்”

அரபு நாடுகளுடன் வர்த்தக கூட்டணி – பாகிஸ்தானுக்கு இந்தியாவின் புதிய “செக்” ஆறு...

புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி உற்சாகம்

புளியரை அருகே சதாசிவ மூர்த்தி கோயிலில் தை உத்திரத் திருவிழா பக்தி...