‘கராத்தே பாபு’ திரைப்பட படப்பிடிப்பு பணிகள் நிறைவு
நடிகர் ரவி மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துவரும் கராத்தே பாபு திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ரவி மோகனின் 34-வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தை, டாடா திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கியுள்ளார்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளராக சாம் சி. எஸ். பணியாற்றி வருகிறார். கதாநாயகியாக, தமிழக முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவாலின் மகளான தவ்தி ஜிவால் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது முழுமையான படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கராத்தே பாபு திரைப்படம் வரவிருக்கும் கோடை விடுமுறை காலத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.