அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா – பின்னடைந்த ட்ரம்ப்

Date:

அஜித் தோவல்–ரூபியோ சந்திப்பு: மோடியின் உறுதியான நிலைப்பாட்டுக்கு அடிபணிந்த அமெரிக்கா – பின்னடைந்த ட்ரம்ப்

இந்தியா–அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக, ட்ரம்பின் அதிபர் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்க இந்தியா தயார் என்றும், மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அடங்காது என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோவிடம் தெளிவாக தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் நரேந்திர மோடியின் இந்த திடமான அரசியல் நிலைப்பாட்டின் விளைவாகவே, இந்தியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 18 சதவீதமாக குறைக்க ட்ரம்ப் நிர்பந்திக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது உலக அரங்கில் இந்தியாவின் அரசியல் ஆளுமையையும் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாக பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தியா–அமெரிக்கா வர்த்தக பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருந்தாலும், அதிபர் ட்ரம்ப் ஏப்ரல் மாதத்தில் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்து, அதை 90 நாட்களுக்கு தற்காலிகமாக ஒத்திவைத்தார்.

அதே காலகட்டத்தில், பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. நான்கு நாட்கள் நீடித்த இந்த மோதலில், இந்திய தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் திணறிய நிலையில், இந்தியா தன்னிச்சையாக அந்த நடவடிக்கையை இடைநிறுத்தியது.

இந்திய–பாகிஸ்தான் மோதலை தாமே நிறுத்தியதாக ட்ரம்ப் கூறியதை இந்தியா மறுத்ததைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கிடையேயான உறவில் சற்று பதற்றம் ஏற்பட்டது.

இதற்குப் பின்னர், கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இந்தியா மீது 25 சதவீத வரியை அமெரிக்கா விதித்ததுடன், ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதைக் காரணமாகக் காட்டி மேலும் 25 சதவீதம் கூடுதல் வரியை விதித்தது. இதோடு, இந்திய மற்றும் ரஷ்ய பொருளாதாரங்கள் செயலிழந்த பொருளாதாரங்கள் என ட்ரம்ப் அவதூறாக பேசியிருந்தார்.

இந்த வரி விதிப்பு அநியாயமானது என்று இந்தியா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் இந்தியாவின் முதன்மை முன்னுரிமை என்றும், அவர்களின் நலனில் இந்தியா எந்நேரமும் சமரசம் செய்யாது என்றும் பிரதமர் மோடி உறுதியாக அறிவித்தார். மரபணு மாற்றம் செய்யப்பட்ட அமெரிக்க வேளாண் பொருட்களுக்கு இந்திய சந்தையில் அனுமதி இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

ட்ரம்பின் ஆலோசகர்கள் உள்ளிட்ட பல அமெரிக்க அரசியல் விமர்சகர்கள் இந்தியாவை இழிவுபடுத்தியும், ரஷ்யாவுடன் இந்தியா எண்ணெய் வர்த்தகம் செய்வதை கடுமையாக விமர்சித்தும் பேசி வந்தனர். இத்தகைய விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல், பிரதமர் மோடி தனது ராஜதந்திர நடவடிக்கைகளில் கவனம் செலுத்தினார்.

கடந்த செப்டம்பர் மாதம் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோருடன் தனித்தனியாக நடத்திய சந்திப்புகள் அமெரிக்காவை கலக்கமடையச் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்புகளுக்குப் பிறகு, இந்தியாவுக்கான அமெரிக்க தூதரகம், இருநாடுகளுக்கிடையேயான கூட்டுறவு தொடர்ந்து புதிய உச்சங்களை எட்டுகிறது என்றும், தொழில், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் கடந்த 25 ஆண்டுகளாக நீடித்து வரும் உறவு மேலும் வலுப்பெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக பதிவு செய்தது.

அந்த பதிவை #USIndiaFWDforOurPeople என்ற ஹேஷ்டேக்குடன் அமெரிக்க வெளியுறவுத்துறையும் பகிர்ந்தது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

அதே செப்டம்பர் மாதத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இடையே ஒரு மிக முக்கியமான சந்திப்பு நடைபெற்றதாக ப்ளூம்பெர்க் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த சந்திப்பில், இந்தியாவை வர்த்தக ஒப்பந்தத்தில் அவசரப்படுத்தவோ அல்லது அழுத்தம் கொடுக்கவோ முடியாது என்பதை அஜித் தோவல் தெளிவாக எடுத்துரைத்ததாகவும், ட்ரம்பின் பதவிக்காலம் முடியும் வரை காத்திருக்க இந்தியா தயாராக இருப்பதாகவும், அதே நேரத்தில் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதாகவும் அவர் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

மேலும், ட்ரம்ப் அல்லது அவரது ஆலோசகர்கள் மிரட்டல்களால் இந்தியாவை பணிய வைக்க முடியாது என்பதையும் அஜித் தோவல் மார்கோ ரூபியோவிடம் நேரடியாக தெரிவித்ததாக ப்ளூம்பெர்க் குறிப்பிட்டுள்ளது.

இந்த சந்திப்பே அமெரிக்காவின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தியாவை மிரட்டிய அதிபர் ட்ரம்ப், பின்னர் பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசி, இந்தியாவிற்கு விதிக்கப்பட்டிருந்த வரியை 18 சதவீதமாக குறைத்ததாக அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 17 அன்று பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ட்ரம்ப், அவரது பிறந்தநாளுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

அதன் பின்னர், இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்தன. இறுதியாக, பிரதமர் மோடியுடன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலுக்குப் பிறகு, இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளதாக ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது குறைவான வரி விகிதத்தை இந்தியா பெற்றதுடன், இந்திய வேளாண்மை மற்றும் பால் உற்பத்தித் துறைகளுக்கு முழுமையான பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

பேச்சுவார்த்தைகளை மீண்டும் சரியான திசையில் கொண்டு செல்ல, பிரதமர் மோடியின் உறுதியான செய்தியை ட்ரம்பிடம் துல்லியமாக கொண்டு சேர்த்த தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் பங்கு, சாத்தியமற்றதை சாத்தியமாக்கியதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

சென்னையில் மூன்றாவது நாளாக நீடித்த போராட்டம் – பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள் கைது

சென்னையில் மூன்றாவது நாளாக நீடித்த போராட்டம் – பார்வை மாற்றுத்திறன் மாணவர்கள்...

காங்கிரஸுடன் பிரிவுக்கு தயாராகிறதா திமுக? – அரசியல் வட்டாரங்களில் பரவும் பரபரப்பு தகவல்

காங்கிரஸுடன் பிரிவுக்கு தயாராகிறதா திமுக? – அரசியல் வட்டாரங்களில் பரவும் பரபரப்பு...

நடுக்கடலில் மயங்கி விழுந்த மீனவர் – இந்திய கடலோர காவல்படையின் துரித மீட்பு

நடுக்கடலில் மயங்கி விழுந்த மீனவர் – இந்திய கடலோர காவல்படையின் துரித...

நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லுபடியாகும் – சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு

நடிகர் விஜய்க்கு விதிக்கப்பட்ட ரூ.1.50 கோடி அபராதம் செல்லுபடியாகும் – சென்னை...