• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
செவ்வாய்க்கிழமை, மார்ச் 24, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
No Result
View All Result

குருதி கறை படிந்த செயல்களுடன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

athibantv by athibantv
பிப்ரவரி 6, 2026
in Political, Tamil-Nadu
A A
0
👁️ 859

குருதி கறை படிந்த செயல்களுடன் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் திமுக – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

வரவுள்ள சட்டமன்றத் தேர்தலை, இரத்தக் கறை படிந்த கைகளுடன் திமுக சந்திக்க இருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த சம்பவம் ஒரு காவல் மரணம் என்றும், அவர்மீது நிகிதா அளித்த புகாரில் உண்மை இல்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ இன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

எந்த ஆதாரமும் இல்லாத வழக்கில், குற்றமற்ற ஒருவரை காவலர்கள் கொடூரமாக தாக்கி உயிரிழக்கச் செய்துள்ளதாக நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் மனிதநேயமற்ற அடக்குமுறை ஆட்சி நடைபெற்று வருவதற்கு இதைவிட வலுவான சான்று வேறு என்ன இருக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

RelatedPosts

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

மார்ச் 23, 2026

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக புகார் அளிக்க வரும் பெண்களிடம் தனிப்பட்ட விவரங்களைத் தோண்டித் தோண்டி விசாரித்து அவமதிக்கும் திமுகவின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறை, அஜித்குமார் மீதான புகாரில் மட்டும் அவசரமாகவும் கடுமையாகவும் நடந்துகொண்டதன் காரணம் என்ன? என்றும் அவர் வினவியுள்ளார்.

புகாரின் உண்மைத் தன்மையை முழுமையாக ஆய்வு செய்யாமல், கையில் கிடைத்த அப்பாவியை கம்பால் அடித்து கொல்லும் அளவிற்கு காவலர்களின் மனசாட்சி உறைந்துவிட்டதா? சிந்தனைத் திறன் மங்கிவிட்டதா? அல்லது மேலிட உத்தரவுகளால் அவர்கள் இத்தகைய செயலில் ஈடுபட்டார்களா? எனவும் அவர் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

சிவகங்கை வரை நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின், தமது நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காவல்துறையின் வன்முறையால் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறாதது ஏன்? போன்ற பல கேள்விகள் பொதுமக்களின் மனதில் எழுந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடை வரும் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மூலமாக கிடைக்கும் என்றும், ஏழை மற்றும் எளிய மக்களின் உயிரை அலட்சியப்படுத்தும் திமுகவின் அடக்குமுறை ஆட்சி மக்கள் தீர்ப்பால் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Related

Tags: PoliticalTamil-Nadu
Previous Post

பைக்குகளில் பாதுகாப்புக்காக இரும்புக் கம்பிகள் – பாகிஸ்தானில் பரவும் புதிய நடைமுறை

Next Post

மதுரையின் உயிர்ச் சின்னமே மீனாட்சியம்மன் கோயில் – சேதம் ஏற்பட்டால் நகரமே பாதிக்கப்படும்: சாலமன் பாப்பையா

RelatedPosts

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026
தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

தமிழகத்தில் இதுவரை ரூ.151 கோடி பறிமுதல்: மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அதிரடித் தகவல்!

மார்ச் 23, 2026
பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

பாலமேடு அருகே பரபரப்பு: கல்குவாரியை ரத்து செய்யக் கோரி சாலை மறியல் – தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாகப் பொதுமக்கள் எச்சரிக்கை!

மார்ச் 23, 2026
திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது: நெல்லை விவசாயி மகள் தற்கொலை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல்!

திமுகவின் ஏவல்துறையாகக் காவல்துறை செயல்படக் கூடாது: நெல்லை விவசாயி மகள் தற்கொலை விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் சாடல்!

மார்ச் 23, 2026
புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

புதுச்சேரி, கேரளம், அசாம்: சட்டப்பேரவைத் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு – வேட்பாளர்கள் மும்முரம்!

மார்ச் 23, 2026
Next Post
Home

மதுரையின் உயிர்ச் சின்னமே மீனாட்சியம்மன் கோயில் – சேதம் ஏற்பட்டால் நகரமே பாதிக்கப்படும்: சாலமன் பாப்பையா

Home

திமுக தலையீட்டால் கன்யாகுமரியில் சீரமைப்பு வேலைகள் இடைநிறுத்தம்?

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

பிரபலமான செய்தி

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!

மார்ச் 23, 2026
ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மார்ச் 23, 2026
புதுச்சேரி தேர்தல்: அதிமுக, பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு – களமிறங்கும் முக்கியப் புள்ளிகள்!

“தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

மார்ச் 23, 2026

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையா? ஈரான் அதிரடி மறுப்பு – ஹோர்முஸ் நீரிணை விவகாரத்தில் நீடிக்கும் சிக்கல்!
  • ஒரே அமர்வில் முடிந்த NDA தொகுதிப் பங்கீடு: பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18 இடங்கள் – எடப்பாடி பழனிசாமி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
  • “தமிழகம் வாழ திமுக வீழ வேண்டும்”: அதிமுக – பாஜக கூட்டணி உறுதி – எடப்பாடி பழனிசாமி அதிரடி முழக்கம்!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • World
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.

No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.