தமிழகத்தில் அடுத்த வாரம் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் தொடங்கப்பட உள்ளன – ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல்
தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் துவங்க உள்ளதாக தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தி.நகர் தொகுதியில் வாக்குச் சாவடி அதிகாரிகளாக உள்ள திமுக உறுப்பினர்கள், அதிமுகக்கு சாதகமாக 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாகவும், அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சத்தியநாராயணன் மனுத்தாக்கல் செய்தார். மனுவில், 1998-ஆம் ஆண்டு 2,08,349 வாக்காளர்கள் இருந்த தொகுதியில் 2021-ஆம் ஆண்டு வெறும் 36,656 வாக்காளர்கள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக ஆதரவாளர்கள் 13,000 பேரின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதால், தேர்தல் நியாயமாகவும் நேர்மையாகவும் நடக்க, 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் வாக்காளர் பட்டியலை மீண்டும் சரிபார்க்க வேண்டியிருப்பதாக மனு கோரியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் அமர்வில் வழக்கை விசாரணைக்கு எடுத்த போது, மொத்த சேர்க்கை, நீக்க நடவடிக்கைகள் சரிபார்க்கப்படாதது மற்றும் தமிழ் ஆவணங்களை மொழிபெயர்த்து தாக்கல் செய்ய நேரம் தரவேண்டியிருப்பதாக மனுதாரர் கோரிக்கை வைத்தார்.
தேர்தல் ஆணையம் தரப்பில், “நாடு முழுவதும் தேர்தலை எதிர்கொண்டுள்ள தமிழகத்திலும், பீஹாரிலும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அடுத்த வாரம் தொடங்க உள்ளன. அந்த நேரத்தில் மனுதாரர் புகார்கள் கவனிக்கப்படும்” என தெரிவித்தது.
நீதிபதிகள் மனுதாரர் கோரிக்கையை ஏற்று வழக்கை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தனர். மேலும், பீஹார் சிறப்பு திருத்தப் பணிகளுக்கான உச்சநீதிமன்ற உத்தரவு நகல்களை தேர்தல் ஆணையத்துக்கு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.