• Home
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Political
  • Health
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
புதன்கிழமை, மே 27, 2026
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Bharat
  • Political
  • Health
  • Big-News
  • Login
  • Register
No Result
View All Result
AthibAn Tv | Today Tamil News | Latest Tamil News
Home World

பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடல் – இந்திய பொருட்களுக்கான வரி 18% ஆக குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

athibantv by athibantv
பிப்ரவரி 3, 2026
in World
0
📢 WhatsApp Channel Join
👁️ 3.3K 🔥 📋

பிரதமர் மோடியுடன் தொலைபேசி உரையாடல் – இந்திய பொருட்களுக்கான வரி 18% ஆக குறைப்பு: ட்ரம்ப் அறிவிப்பு

இந்தியா மற்றும் அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா விதித்து வந்த பரஸ்பர சுங்க வரி, இதுவரை இருந்த 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் உரையாடியது மிகுந்த மகிழ்ச்சியை அளித்ததாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தன்னுடைய நெருங்கிய நண்பர் என்றும், உலக அளவில் சக்தி வாய்ந்ததும் மரியாதைக்குரியதும் ஆன தலைவராக அவர் திகழ்வதாகவும் ட்ரம்ப் புகழாரம் சூட்டியுள்ளார்.

Related posts

பாகிஸ்தானில் பயங்கரவாதம்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் உடல் சிதறிப் பலி, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

பாகிஸ்தானில் பயங்கரவாதம்: ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலைக் குறிவைத்து தற்கொலைப் படைத் தாக்குதல் – 24 பேர் உடல் சிதறிப் பலி, 50-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

மே 24, 2026
அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: அச்சுறுத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றன பாதுகாப்புப் படைகள் – பொதுமக்கள் ஒருவர் காயம்!

அமெரிக்க வெள்ளை மாளிகை அருகே துப்பாக்கிச்சூடு: அச்சுறுத்திய மர்ம நபரை சுட்டுக்கொன்றன பாதுகாப்புப் படைகள் – பொதுமக்கள் ஒருவர் காயம்!

மே 24, 2026

இந்த உரையாடலின்போது, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவுகள் மட்டுமின்றி, ரஷ்யா – உக்ரைன் போர் மற்றும் அதனை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சிகள் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், இந்தியா ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை படிப்படியாகக் குறைத்து, அமெரிக்காவிடமிருந்து அதிக அளவில் எண்ணெய் வாங்க ஒப்புக்கொண்டுள்ளதாகவும், அதேபோல் வெனிசுலாவிலிருந்தும் எண்ணெய் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த நடவடிக்கைகள், உக்ரைன் போரால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுப்பதற்கான முயற்சிகளுக்கு உதவும் எனவும் ட்ரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடியின் மீது தன்னுக்கு உள்ள ஆழ்ந்த மரியாதை மற்றும் நட்பு காரணமாகவும், அவர் முன்வைத்த கோரிக்கையின்பேரிலும், இந்தியா – அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை உடனடியாக நடைமுறைக்கு கொண்டு வர ஒப்புக்கொண்டதாக அமெரிக்க அதிபர் விளக்கமளித்தார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், அமெரிக்கா விதித்திருந்த 25 சதவீத பரஸ்பர சுங்க வரி இனி 18 சதவீதமாக குறையும் என்றும், அதே நேரத்தில் அமெரிக்காவில் தயாரிக்கப்படும் பொருட்களுக்கு இந்தியா விதிக்கும் வரியை பூஜ்ஜிய நிலைக்கு குறைக்கும் என எதிர்பார்ப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், அமெரிக்க பொருட்களை பெருமளவில் வாங்க இந்தியா உறுதியளித்துள்ளதாகக் கூறிய ட்ரம்ப், மொத்தம் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி உள்ளிட்ட துறைகளைச் சார்ந்த பொருட்களை இந்தியா வாங்கும் எனவும் தெரிவித்தார்.

இந்தியாவுடனான நட்பு உறவு மிகச் சிறப்பானதாக இருப்பதாக குறிப்பிட்டுள்ள ட்ரம்ப், எதிர்காலத்தில் இந்த நட்பு மேலும் வலுப்பெறும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், தானும் பிரதமர் மோடியும் “காரியங்களைச் செய்து முடிக்கும் தலைவர்கள்” என்றும் அவர் கூறினார்

📢 WhatsApp Channel Join

Related

Tags: World
Previous Post

இந்திய பயணிகளுக்கான சுங்க வரி சலுகை அதிகரிப்பு – பெண்கள் 40 கிராம் தங்க நகைகளுடன் வர அனுமதி

Next Post

மாணவர்கள் முன்னேறினால் நாடும் முன்னேறும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

Next Post

மாணவர்கள் முன்னேறினால் நாடும் முன்னேறும் – ஆளுநர் ஆர்.என்.ரவி

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

BROWSE BY CATEGORIES

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World
💰 தங்கம் & வெள்ளி விலை

Loading...
இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 26, 2026
“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

மே 26, 2026
கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

மே 26, 2026

பிரபலமான பதிவுகள்

About Us

📰 அதிபன் டிவி | AthibAn TV – உங்கள் நம்பிக்கையின் தமிழ் ஊடகம்

தமிழகம் முழுவதும்... உலகம் முழுவதும்... தமிழர்களுக்காக! அனைத்துத் தகவல்களையும் தரமான முறையில் தருவதே எங்கள் நோக்கம்!

🔴 அதிபன் டிவி என்பது 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒரு முன்னணி தமிழ் மொழி ஆன்லைன் ஊடகம். நமது நோக்கம் — உண்மையை நேர்மையாகவும், வேகமாகவும், மக்களுக்கு எட்டச்செய்வதே!

Recent News

  • இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:
  • “இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்
  • கோவை: காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!

Category

  • Bharat
  • Big-News
  • Business
  • Cinema
  • Crime
  • Election-Field
  • Gold
  • Health
  • Political
  • Spirituality
  • Sport
  • Tamil-Nadu
  • Video
  • World

Recent News

இன்று தங்கம் விலை சற்று குறைவு…

இன்றைய தங்கம் விலை நிலவரம் இதோ:

மே 26, 2026
“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

“இந்தியச் சுதந்திரப் போராட்ட வீரர்களைத் துணிவுடன் எழுச்சிகொள்ளச் செய்த, ‘ஜெய் ஹிந்த்’ எனும் முழக்கம்… தமிழ்நாடு ஆளுநர்

மே 26, 2026
  • Home
  • About
  • Privacy Policy
  • Contact

Welcome Back!

Login to your account below

Forgotten Password? Sign Up

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Home
  • பஞ்சாங்கம்
  • Tamil-Nadu
  • World
  • Business
  • Sport
  • Spirituality
  • Bharat
  • Political
  • Health
  • OTTPlay
  • Big-News
  • தேர்தல் களம்

© AthibAn Tv . AthibAn Corp Network Pvt. Ltd. All rights reserved.
💬
×

📢 WhatsApp Channel

உடனடி செய்திகளை பெற join செய்யுங்கள்!

Join Now
📢 Latest Updates? Join WhatsApp Channel JOIN