மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு உச்ச முன்னுரிமை – ரூ.7.84 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

Date:

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு உச்ச முன்னுரிமை – ரூ.7.84 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு அதிகபட்ச முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில், பாதுகாப்பு துறைக்காக ரூ.7 லட்சத்து 84 ஆயிரத்து 678 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கிலும், ஆயுதப்படைகளின் நவீனமயமாக்கல், எல்லை பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு துறைக்கு அடுத்தபடியாக, போக்குவரத்து துறைக்கு ரூ.5 லட்சத்து 98 ஆயிரத்து 520 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாலை, ரயில் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சிக்காக ரூ.2 லட்சத்து 73 ஆயிரத்து 108 கோடியும், உள்துறைக்கு ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்து 234 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கிராமப்புற வளர்ச்சி திட்டங்கள் மற்றும் உள்நாட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வேளாண் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளுக்கு ரூ.1 லட்சத்து 62 ஆயிரத்து 671 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் நலன், பாசன திட்டங்கள் மற்றும் வேளாண் உற்பத்தி மேம்பாட்டிற்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறைக்கு ரூ.1 லட்சத்து 39 ஆயிரத்து 289 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், எரிசக்தி துறைக்கு ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 29 கோடி, சுகாதாரத் துறைக்கு ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 599 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், நகர்ப்புற வளர்ச்சிக்காக ரூ.85 ஆயிரத்து 522 கோடியும், தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.74 ஆயிரத்து 560 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்கு ரூ.70 ஆயிரத்து 296 கோடியும், சமூக நலத்துறைக்கு ரூ.62 ஆயிரத்து 362 கோடியும் நிதி வழங்கப்பட்டுள்ளது.

அறிவியல் மற்றும் ஆராய்ச்சி துறைகளுக்கு ரூ.55 ஆயிரத்து 756 கோடி, வரி நிர்வாகத்துறைக்கு ரூ.45 ஆயிரத்து 500 கோடி, வெளியுறவுத் துறைக்கு ரூ.22 ஆயிரத்து 119 கோடி மற்றும் நிதித்துறைக்கு ரூ.20 ஆயிரத்து 649 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக ரூ.6 ஆயிரத்து 812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பட்ஜெட் மூலம் தேசிய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுக்கு சமநிலையுடன் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி மீது சின்ன உடைப்பு கிராம மக்களின் எதிர்ப்பு தீவிரம்

மதுரை விமான நிலைய நிலம் கையகப்படுத்தல் விவகாரம் – அமைச்சர் மூர்த்தி...

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில் அதிருப்தி; மதுரை ஆட்சியர் அலுவலகம் போராட்டக்களம்

அமைச்சர் மூர்த்தி கருத்து விவகாரம் – சின்ன உடைப்பு கிராம மக்களில்...

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு

அமெரிக்கா தேவைக்கு பயன்படுத்தி புறக்கணிக்கிறது – பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் குற்றச்சாட்டு அமெரிக்கா...

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள் லஞ்சம் வழங்கியதாக குற்றச்சாட்டு

மூடா வழக்கில் புதிய சர்ச்சை – லோக் ஆயுக்தா அதிகாரிகளுக்கு கோடிகள்...