மாம்பழம் சின்னம் தொடர்பான விவகாரம் – தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

Date:

மாம்பழம் சின்னம் தொடர்பான விவகாரம் – தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

அன்புமணி ராமதாஸ் அணிக்கு மாம்பழம் தேர்தல் சின்னம் வழங்கப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கில், இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், தேர்தல் ஆணையம் அன்புமணி தரப்பிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, தலைமை நீதிபதி ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், அன்புமணி ராமதாஸின் கட்சி பதவிக்காலம் கடந்த ஆண்டு மே மாதத்திலேயே முடிவடைந்துவிட்டதாகவும், அதனைத் தொடர்ந்து அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஒருவருக்கு தேர்தல் ஆணையம் எந்தவிதமான தகவலையும் அனுப்பக் கூடாது என்றும், சின்னம் ஒதுக்கீடு தொடர்பான அனைத்து தகவல்களும் கட்சியின் நிறுவனர் ராமதாஸுக்கே அனுப்பப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

இரு தரப்பின் வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் மூன்று வார காலத்திற்குள் விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழகத்தில் அரிய கனிம வள வழித்தடங்கள் – மத்திய பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு

தமிழகத்தில் அரிய கனிம வள வழித்தடங்கள் – மத்திய பட்ஜெட்டில் முக்கிய...

ஆரணி அருகே வன்னியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை – பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு

ஆரணி அருகே வன்னியர் உள்ஒதுக்கீடு கோரிக்கை – பட்டதாரி இளைஞர் உயிரிழப்பு திருவண்ணாமலை...

பில் கேட்ஸ் தொடர்பாக புதிய சர்ச்சை? – எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றதாக கூறப்படும் தகவல்கள்

பில் கேட்ஸ் தொடர்பாக புதிய சர்ச்சை? – எப்ஸ்டீன் கோப்புகளில் இடம்பெற்றதாக...

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு உச்ச முன்னுரிமை – ரூ.7.84 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு

மத்திய பட்ஜெட்டில் பாதுகாப்பு துறைக்கு உச்ச முன்னுரிமை – ரூ.7.84 லட்சம்...