தரமற்ற உணவுக்கு எதிர்ப்பு – தனியார் கல்லூரி மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டம்!

Date:

தரமற்ற உணவுக்கு எதிர்ப்பு – தனியார் கல்லூரி மாணவர்கள் இரவு முழுவதும் போராட்டம்!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் கல்லூரியில், விடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவுக்கு எதிராக மாணவர்கள் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குமாரபாளையத்தில் உள்ள எக்ஸல் கல்லூரியில், தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களும் தங்கி படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், விடுதியில் வழங்கப்பட்ட உணவு மிகவும் மோசமான தரத்தில் இருந்ததாகவும், அதை உட்கொண்ட 400-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டதாகவும் மாணவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி, மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து இரவு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது, சில மாணவர்கள் கல்லூரி கட்டடத்தின் கண்ணாடிகளை உடைத்ததாக கூறப்படுகிறது. இதனால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்க கல்லூரி வளாகத்தில் பெருமளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம், மாணவர் பாதுகாப்பு மற்றும் விடுதி வசதிகள் தொடர்பாக கடும் கேள்விகளை எழுப்பியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கணைய புற்றுநோயை முற்றிலும் அழிக்கக் கூடிய புதிய சிகிச்சை முறை – ஆராய்ச்சியில் முன்னேற்றம்

கணைய புற்றுநோயை முற்றிலும் அழிக்கக் கூடிய புதிய சிகிச்சை முறை –...

திடீரென செயலிழந்த விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – ரசிகர்கள் அதிர்ச்சி

திடீரென செயலிழந்த விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் கணக்கு – ரசிகர்கள் அதிர்ச்சி இந்திய...

போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு – சென்னையில் இளம்பெண் தற்கொலை முயற்சி

போலீஸ் அத்துமீறல் குற்றச்சாட்டு – சென்னையில் இளம்பெண் தற்கொலை முயற்சி சென்னை பட்டினப்பாக்கம்...

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தை தேரோட்டத் திருவிழா – பக்தர்களால் நிறைந்த கோலாகலம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் தை தேரோட்டத் திருவிழா – பக்தர்களால் நிறைந்த...