வெனிசுலா இடைக்காலத் தலைவருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை
வெனிசுலாவின் இடைக்கால அரசுத் தலைவராக செயல்பட்டு வரும் டெல்சி ரோட்ரிக்சுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வழியாக முக்கிய கலந்துரையாடலை மேற்கொண்டார்.
அமெரிக்க படைகளால் கைது செய்யப்பட்ட வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் தற்போது காவலில் இருப்பதைத் தொடர்ந்து, அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் டெல்சி ரோட்ரிக்சை பொறுப்பு அதிபராக நியமித்தது.
இந்த பின்னணியில், டெல்சி ரோட்ரிக்சுடன் பிரதமர் மோடி நேரடியாக தொடர்பு கொண்டு இருநாடுகளுக்கிடையேயான உறவுகள் குறித்து விவாதித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்காலத்தில் இந்தியா–வெனிசுலா நட்புறவை புதிய உச்சத்துக்கு கொண்டு செல்லும் நோக்குடன், அனைத்து துறைகளிலும் இருதரப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த இருவரும் ஒருமித்த கருத்தில் இணைந்ததாக தெரிவித்துள்ளார்.