ஆட்சியர் நிர்ணயித்த சம்பளம் வழங்கப்படவில்லை – தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் குற்றச்சாட்டு
மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்துள்ள ஊதியத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வழங்காமல் இருப்பதாக தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கடலூரில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட தூய்மைப் பணியாளர் நலவாரிய தலைவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி, பணியாளர்கள் சந்தித்து வரும் பிரச்னைகளை வெளிப்படையாக எடுத்துரைத்தார்.
அவர் கூறுகையில், மாவட்ட ஆட்சியர் நிர்ணயித்த தினசரி 535 ரூபாய் ஊதியம் வழங்கப்படாமல், அதிகாரிகள் 270 ரூபாய் மட்டுமே கொடுத்து வருகின்றனர் என கடுமையாக குற்றம்சாட்டினார்.
இதுதவிர, பணியில் பயன்படுத்த வேண்டிய கையுறைகள், சீருடை உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படாததால், அவற்றை சொந்த செலவில் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.